புதுடில்லி: "கடந்த ஐந்தாண்டுகளில், தற்கொலை மற்றும் உடன் பணிபுரிவோரால் கொல்லப்பட்டது என, ராணுவத்தினர் 620 பேர் உயிரிழந்துள்ளனர்' என்று ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2007ம் ஆண்டு முதல் இதுவரை ராணுவ வீரர்கள் 603 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 17 பேர், சக ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 620 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இது போன்ற சம்பவங்களில் 72 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில், 2008ம் ஆண்டில் அதிகபட்சமாக 150 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராணுவ வீரர்கள் தற்கொலை மற்றும் சக ராணுவ வீரர்களால் கொல்லப்படுவது போன்றவற்றை தடுக்க, ஆய்வுத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்தோணி கூறினார்.
Earnings at risk – You need to fix some ads.txt file issues to avoid severe
impact to your revenue.
-
mgr-rajini-kamala.blogspot.in
Needs attentionGoogle-served ads on screens without publisher contentNot
found
15 Feb 2025
09:17 | IST
dmk-admk-congress-el...
No comments:
Post a Comment